அம்பேத்ருக்குமா பூணூல்

விட்டால் அண்ணல் அம்பேத்கருக்கும் பூணூல் போட்டு விடுவார்கள் போலிருக்கிறது.
ஒப்பற்ற தேசியத் தலைவர்! என்று தலைப்பிட்டு ஆர்.எஸ்.எஸ். வார ஏடான விஜயபாரதம் எழுதுகிறது.
நாகபுரியில் 1956ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் தேதி அவர் புத்த மதத்தைத் தழுவினார் (மதம் அல்ல – மார்க்கம்!) அவருடன் ஆயிரக்கணக்கான தாழ்த்தப்பட்ட சகோதரர்களும் புத்த மதத்தில் இணைந்தனர்.
தாழ்த்தப்பட்டவன் தீண்டாத்தகாதவன் என்றெல்லாம் சொல்லி, அவருக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் கணக்கற்றவை. எனினும் அவர் தீண்டாமைப் பிரச்சினையை தேசியக் கண்ணோட்டத்துடன் அணுகினார். புத்த மதத்தில் இணைவதற்கு அவர் கூறிய காரணங்கள் இதைத் தெளிவாக்குகின்றன.
புத்த மதம் பாரதீய இந்து கலாச்சாரத்தில் பிரிக்கப்பட முடியாத அங்கம். எனவே, இந்த மாற்றத்தால் இந்த நாட்டின் கலாச்சாரத்திற்கோ, பாரம்பரியத்திற்கோ எவ்விதப் பாதிப்பும் இல்லை என்று நான் உறுதியாக நம்புகிறேன்
இவ்வாறு அண்ணல் அம்பேத்கர் சொன்னதாக ஆர்.எஸ்.எஸ். வார இதழ் வழக்கம் போல தனது வக்கணைப் புத்தியை, திரிபு வாதக் கொள்ளியைச் கழற்றிச் சொல்லி இருக்கிறது.
நாக்பூரில் அண்ணல் இந்து மதத்தை விட்டு உதறி புத்த மார்க்கத்தில் இணைந்த போது அவரும், அவரைச் சார்ந்த லட்சோப லட்சம் தாழ்த்தப்பட்ட மக்களும் (ஆயிரக் கணக்கில் என்று விஜயபாரதம் புளுகு வதைக் கவனிக்கவும்) இணைந்த போது மேற்கொண்ட உறுதிமொழிகளையும் வெளியிட்டு இருந்தால் அதற்குப் பெயர்தான் அறிவு நாணயம் என்பது.
அவர்களால் அதனை எடுத்துப் போட முடியாது. காரணம் அவர் அதில் இந்து மதத்தின் வண்டவாளங்களைத் தண்டவாளத்தில் ஏற்றியிருக்கிறாரே! அவர்கள் வெளியிடா விட்டால் என்ன? விடுதலை இதோ வெளியிடுகிறது.
1956 அக்டோபர் 14 ஆம் நாள் பார்ப்பன ஆதிபத்திய வருணாசிரம இந்து மதத்தி லிருந்து 5 லட்சத்துக்கும் அதிகமான தாழ்த் தப்பட்ட தோழர்களும் பவுத்தம் தழுவியபோது அண்ணல் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்களும், மற்றவர்களும் எடுத்துக் கொண்ட உறுதி மொழிகள் இதோ:
1. பிரம்மனையோ, விஷ்ணுவையோ, சிவனையோ நான் கடவுள் என்று கருத மாட்டேன். அவர்களை வழிபாடு செய்யவும் மாட்டேன்.
2. இராமனையோ, கிருஷ்ணனையோ நான் கடவுள் என்று கருதமாட்டேன்; அவர்களை வழிபாடு செய்யவும் மாட்டேன்.
3. இந்துத் தெய்வங்களான கவுரி, கணபதி, இத்தியாதிகளை நான் கடவுள் என்று ஏற்க மாட்டேன்; அவைகளை வழிபாடு செய்யவும் மாட்டேன்.
4. கடவுள் பிறவி எடுத்ததாகவோ, எந்தவொரு உருவத்தில் அவதாரம் செய்ததாகவோ நான் நம்பமாட்டேன்.
5. பகவான் புத்தர்; மகா விஷ்ணுவின் அவதாரம் என்பதை நான் நம்பமாட்டேன். அப்படிப்பிரச்சாரம் செய்வது விஷமத்தன மானது, தவறானது என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
6. சாவு சம்பந்தப்பட்ட இந்து மதச் சடங்கான சிரார்த்தத்தை நான் ஒருபோதும் செய்யமாட்டேன்; இறந்தவர்களின் பெயரால் நான் பிண்டம் கொடுக்கவும் மாட்டேன்.
7. பவுத்தத்தின் கோட்பாடுகளுக்கு எதிராக நான் என்றுமே நடக்க மாட்டேன்.
8. பார்ப்பனர்களால் நடத்தப்படும் சமஸ்காரங்கள் எதனையும் நான் என்றுமே ஏற்றுக்கொள்ளமாட் டேன்.
9. அனைவரும் சமம் என்ற கொள்கையை நான் நம்புகிறேன்.
10. சமத்துவத்தை நிலைநாட்ட நான் முயல்வேன்.
11. பகவான் புத்தர் காட்டிய எட்டு அம்ச வழியை நான் பின்பற்றுவேன்.
12. தம்மதத்தின் 12 பரமிதங்களையும் நான் பின்பற்றுவேன்.
13. எல்லா உயிர்ப் பிராணிகளிடத்தும் நான் கருணை காட்டுவேன்; அவைகளைக் காக்க முயலுவேன்.
14. நான் பொய் சொல்லமாட்டேன்.
15. நான் திருட மாட்டேன்.
16. காமத்தில் நான் உழல மாட்டேன்; பாலுணர்வில் அத்துமீற மாட்டேன்.
17. போதைக்குக் காரணமான குடியையோ, மதுவையோ நான் அருந்த மாட்டேன்.
18. ஞானம், கருணை, அறிவுரை ஆகியவற்றின் அடிப்படையிலான புத்தரின் போதனைகளுக்கு இணங்க என் வாழ்வை உருவாக்க நான் முயலுவேன்.
19. பார்ப்பனர் தவிர்த்த பிற மனிதர்களை கீழான பிறவிகள் என்று கருதுவதும், சமத்துவமற்ற நிலையில் நம்பிக்கை உடையதும், மனிதர்களின் விடுதலைக்குக் கேடாக இருப்பதுமான இந்து மதத்தை நான் கைவிட்டு விட்டு இன்று புத்த மதத்தைத் கைக் கொள்ளுகிறேன்
20. புத்த தம்மமே சிறந்த மார்க்கம் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
21. இன்று புதிய பிறவி எடுக்கிறேன் என்று நான் நம்புகிறேன்.
22. புத்த தம்மத்துக்கு இணங்கவே இன்று முதல் நான் செயல்படுவேன் என்று உறுதி கூறுகிறேன். இந்த உறுதி மொழிகளில் இந்து மதத்தின் மீது ஏதாவது அபிமானம் காணப்படுகிறதா?
நான் இந்துவாக சாக மாட்டேன் என்று சொன்னவர் தம் வாழ்நாளில் அதனைச் சாதித்துக் காட்டினார்.
உண்மை இவ்வாறு இருக்க, மத மாற்றத்தால் இந்து மதக் கலாச்சாரத்துக்கோ பாரம்பரியத்திற்கோ எவ்விதப் பாதிப்பும் இல்லை என்று சொன்னாராம் அண்ணல். எங்கே சொன்னார்? எப்பொழுது சொன்னார்? ஆதாரத்துடன் வெளியிட வேண்டாமா? கொஞ்சம் அசந்தால் அண்ணல் அம்பேத்கர் அவர்களை அய்யங்காராக்கிப் பூணூலையும் போட்டு விடுவார்கள் போலும்!
——————- “விடுதலை” 16-2-2012 இதழில் – கறுஞ்சட்டை – எழுதிய கட்டுரை
ராமர் அப்படி என்ன ஒழுக்கத்தைப் போதித்து விட்டார்?
ராமன் ஒழுக்கத்தைப் போதித்தானா?
கேள்வி: உத்தரப்பிரதேசத்தில் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோவில் கட்டியே தீருவோம் என்கிறதே பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை.
பதில்: அப்படியெல்லாம் எதுவும் நடக்காது என்பது அத்வானிக்குத் தெரியும். ராமருக்கும் தெரியும். முதலில் ராமர் கோவில் கட்டுவதை விட்டுவிட்டு, அவர் கட்சி எம்.எல்.ஏ.,க்களுக்கு ராமரின் ஒழுக்கத்தைப் போதிக்கட்டும். – ஆனந்தவிகடன் கேள்வி – பதில், 22.2.2012
ராமர் அப்படி என்ன ஒழுக்கத்தைப் போதித்து விட்டார்?
மரத்தின் பின்னால் ஒளிந்திருந்து கோழைத்தனமாக வாலியைக் கொன்றாரே அந்த ஒழுக்கத்தையா?
சக்ரவர்த்தி திருமகன் எழுதிய ராஜகோபாலாச் சாரியாரே வாலி வதம் படலத்தில் ராமனின் கோழைத் தனத்தை நியாயப்படுத்த முடியாமல் மூச்சு முட்டத் திணறி நிற்கிறாரே!
கோழைத்தனமாக மரத்தின் பின்னால் மறைந்து நின்று தன்னைக் கொன்ற ராமனை நோக்கி வாலி என்ன சொல்லுகிறார்?
ராமனே! தசரத சக்கரவர்த்தியின் புத்திரனா வாய். உத்தம குலத்தில் பிறந்த நீ, பெரும் புகழும் அடைந்த நீ, ஏன் இப்படிச் செய்தாய்? உன் நற்குணங்களும், ஒழுக்கமும் உலகம் அறிந்த விஷயம். இப்படியிருக்க நான் வேறொருவனிடம் யுத்தம் செய்துகொண்டு அதில் மனம் முற்றிலும் செலுத்தி வந்த சமயத்தில் என் கண்களுக்குத் தென்படாமல் மறைந்து நின்று என்மேல் பாணம் விட்டு என்னைக் கொன்றாய். உன்னைப் பற்றி ஜனங்கள் சொல்லும் புகழ் மொழிகளுக்கு இது முற்றிலும் விரோதமாயிருக்கிறதே! எல்லாப் பிராணிகளிடமும் கருணை கொண்டவன், தோஷ எண்ணங்களுக்கு இடம் கொடுக்காமல் புலன் களையும், உள்ளத்தையும் அடக்கியாள்பவன், அற வழியில் நிற்பவன், பொறுமை, சாந்தி, தருமம், சத்திய பராக்கிரமம் முதலிய உத்தம குணங்களை எல்லாம் பெற்றவன் என்று கீர்த்தி பெற்றாயே, இப்போது அவையெல்லாம் என்ன வாயின? என்னைக் கொன்று நீ என்ன லாபம் பெறுவாய்? யோசிக்காமல் இந்த அதரும காரியம் செய்தாய். என் மனைவி உன்னைப் பற்றி என்னை எச்சரித்தாள்.
அவள் பேச்சைத் தட்டி விட்டு வந்தேன். நீ வேஷதாரியென்றும், துன் மார்க்கன் என்றும், புல்லால் மூடப்பட்ட பாழுங்கிணறு போன்ற பாவி என்றும் தெரி யாமல், மனைவியின் பேச்சைக் கேளாமல், நான் என் தம்பியுடன் யுத் தத்துக்கு வந்தேன். உனக்கு என்ன தீமை நான் செய்தேன்? உன்னுடன் யுத்தம் செய்யவா நான் வந் தேன்? அதருமத்தில் இறங்கி என்னை மறைந்து நின்று கொன்றாய். நல்ல அரசு குலத்தில் பிறந்து பெரும் பாவத்தைச் செய்தாய். நிரபராதி யைக் கொன்றாய். நீ அரச பதவிக்குத் தகுந்த வனல்ல.
மோசக்காரனான உன்னைப் பூதேவி மணக்க விரும்பமாட்டாள். நீ எப்படித் தசரதனுக்கு மகனாகப் பிறந்தாய்? தருமத்தை விட்டு நீங்கின நீசனால் கொல்லப் பட்டேன். என் கண்ணுக்கு முன் நின்று நீ யுத்தம் செய்திருந்தாயேல் இன்றே நீ செத்திருப்பாய். என்னை நீ வேண்டிக் கொண்டி ருந்தால் ஒரே நாளில் சீதையை உன்னிடம் அழைத்து வந்து விட்டிருப்பேனே! சுக்ரீவனுக்காக என்னைக் கொன்றாயே. ராவணனைக் கொன்று பிரேதத்தைக் கழுத்தில், கயிறு போட்டுக் கட்டி உன்னிடம் இழுத்துக் கொண்டு வந்து விட்டிருப்பேனே! மைதிலியை எவ்விடம் மறைத்து வைத்திருந்தாலும் கண்டுபிடித்து உன்னிடம் ஒப்புவித்திருப்பேனே! பிறந்தவர்கள் இறப்பது விதி. ஆயினும் நீ முறை தவறி என்னைக் கொன்றாய். உன் குற்றம் பெருங்குற்றம்.
இவ்வாறு தேவேந்திர குமாரனான வாலி மரணாவஸ்தையில் ராமனைக் கண்டித்தான்.
வாலியின் இந்தக் குற்றச்சாட்டுக்கு ராமன் என்ன பதில் சொல்ல முடியும்? ஏதோ சொன்ன தாகவும், அதைக் கேட்டு வாலி சமாதானப்பட்ட தாகவும் வால்மீகி ராமாயணத்தில் சொல்லப்படு கிறது. அதில் சாரம் இல்லை என்று விட்டு விட்டேன். பெரியோர்கள் மன்னிப்பார்கள்.
– ராஜாஜி எழுதிய சக்ரவர்த்தி திருமகன், பக்கம் 205-206
கோழைத்தனமாக வாலியைக் கொன்ற ராமனின் பதிலில் சாரம் இல்லை என்று ஆச்சாரியாரே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துவிட்ட பிறகு, ஆனந்த விகடன்கள் ராமனைக் காப்பாற்றிட முயற்சிப்பானேன்?
ராமனை ஒழுக்கவான் என்று தூக்கி நிறுத்த ஆசைப்படுவானேன்?
பக்தியைக் காப்பாற்றாவிட்டால் பிராமணன் என்ற பிறவி அந்தஸ்து பறிபோய்விடுமே – அதுதானே காரணம்?
———————– “விடுதலை” 21-2-2012
இதுதான் மகா சிவராத்திரியின் இரகசியம்!
மகா சிவராத்திரியின் மகா பாவ மகாத்மியம்!
மகா சிவராத்திரி என்று கூறி, நாள் முழுவதும் பட்டினி கிடந்து, இரவெல்லாம் கண் விழித்துப் பயப்பக்தியைக் காட்டும் பக்தர்காள்!
இந்தப் பக்தியின் இரகசியம் என்ன? இதோ:-
ஒரு பார்ப்பன வாலிபனைப் பற்றியது. இவன் ஒரு சுத்த அயோக்கியனும் ஒழுக்கக் கேடனும் ஆவானாம். இதனால் ஊரை விட்டுத் துரத்தப்பட்டானாம். காலை முதல் இரவு முடிய உண்ண உணவு இல்லாமல், பசியால் வாடிய அவன் இரவு வந்ததும் ஒரு சிவன் கோவிலை அடைந்தானாம். அப்போது அந்தக் கோவில் அர்ச்சகன் பொங்கல் படையலை அந்த ஈசுவரன் சிலை முன் வைத்துவிட்டு வெளியில் சென்று இருந்தான்.
இந்தப் பார்ப்பன வாலிபன் யாரும் இல்லாத சமயம் அங்குச் சென்றபடியால் அவற்றை எடுத்து உண்ண ஆசைப்பட்டு, என்னென்ன பலகாரங்கள் இருக்கின்றன என்பது தெரியாதபடியால், இருண்ட வெளிச்சமாக இருந்ததைக் கருதி, கோவிலில் இருந்த விளக்கின் திரியை தூண்டிவிட்டானாம். அப்போது திரும்பி வந்த அர்ச்சகன், பார்ப்பன இளைஞன் பலகாரங்களை மூட்டை கட்டுவதைக் கண்டு, ஆத்திரத்தில் அவனை அடித்துக் கொன்றான். அன்று மகாசிவராத்திரியாம்.
ஒழுக்கங்கெட்ட அந்தப் பார்ப்பான், காலை முதல் இரவு வரை பட்டினி இருந்தது மகா சிவராத்திரி விரத பகல் உபவாசம் ஆனதாம். திருட எண்ணி, பிரசாதங்களைப் பார்ப்பதற்கு விளக்கு வெளிச்சத்தைத் தூண்டியது சிவராத்திரியில் ஈஸ்வரலிங்க சிலைக்கு தீப ஆராதனை செய்தது போலவும் பிரசாத நிவேதனம் செய்தது போலவும் ஆனதாம். இதனால் பார்ப்பனப் பூசாரியால் கொல்லப்பட்டதும் நேராக சிவலோகம் சென்றானாம்.
இதுதான் மகா சிவராத்திரியின் இரகசியம்!
எந்த அயோக்கியத்தனம் செய்தாலும் சிவனைக் கும்பிட்டால், மகா சிவராத்திரி விரதம் கடைபிடித்தால் பாவம் போகும். மோட்சம் கிடைக்கும் என்றால் இது ஒழுக்கக் கேட்டை ஊக்குவிப்பது ஆகாதா? பக்தர்களே, சிந்திப்பீர்!
—————-“விடுதலை” 20-2-2012
ஆரியம் – மதம் – கடவுளுக்கு எதிராக அண்ணா எழுப்பிய கேள்விகள்
திராவிட நாடு இதழில் (16.1.1944) மூடநம்பிக்கை, கடவுள், மதம், ஆரியத் திற்கு எதிராக அண்ணா எழுப்பிய கேள்விகள் வருமாறு:
1) நமது நாட்டில் சைவ சமயத்திற்கு முன்னால் ஏதாவது சமயம் இருந்ததா?
2) அது எது?
3) சைவ சமயம் என்பது எப்போது உண்டாயிற்று?
4) அதற்கு முதல் கர்த்தா அல்லது சமயாச்சாரி என்பவர் யாவர்?
5) சைவ சமயத்திற்கு மற்ற சமயத்தில் இல்லாத தனிக் கொள் கைகள் என்ன?
6) அதற்கு ஆதாரம் யாது?
7) சைவம் என்பது சிவன் என்னும் ஒரு உருவமுள்ள கடவுளை, வழிபடு கடவுளாகக் கொண்டதா?
8) அல்லது தனித் தெய்வமில் லாமல் ஏதாவது கொள்கைகளை மாத்திரமோ, அல்லது குணத்தை மாத்திரமோ அடிப்படையாகக் கொண்டதா?
9) சிவன் என்பது ஒரு கடவுள் பெயரா?
10) ஒரு தன்மையா?
11) ஒரு குணமா?
12) சிவனுக்கு உருவம் சொல்லப்படுகிறதே- அது ஏன்?
13) அதற்குப் பெண்டு பிள்ளைகளும் இருப்பதாக காணப்படுகிறதே, ஏன்?
14) சைவ சமயம் சம்பந்தமான பல கடவுள்களுக்கு உள்ள ஆயிரக்கணக்கான பெயர்கள் வட மொழியில் இருப்பானேன்?
15) ஆயிரக்கணக்கான கடவுள்களுக்கும் அவர் களது பெண்டு பிள்ளைகளுக்கும் வேறு வேறு பெயர்கள் ஏன்?
16) சைவத்திற்கும், சமணக் கொள்கைகளுக்கும், பவுத்த கொள்கைகளுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
17) ஆரிய வேதத்தையும், ஜீவபலி வேள்வியையும் சைவம் ஒப்புக் கொள்ளுகின்றதா? மறுக்கின்றதா?
18) சைவ சமயாச்சாரியர்கள் என்பவர்கள் ஆரிய வேதத்தையும், அதில் காணும் வேள்வி களையும் ஒப்புக் கொள்கின்றனரா? மறுக் கின்றனரா?
19) சமணர்கள் வேத வேள்வியை நிந்தனை செய் தார்கள் என்றால் அது எந்த வேதத்தையும், வேள்வியையும்?
20) சைவ சமயத்திற்குள்ள சித்தாந்தமும், ஆகமமும் வடமொழியா? தென் மொழியா?
21) சைவ சமயத்தையே சேர்ந்த சைவக் கடவுள்கள் இருக்கும் தனித்தனி ஊர்களுக்கு தனித்தனி பெருமை ஏன்?
22) சமயாச்சாரிகள் என்போர்களால் பாடப்பட்ட ஊர்களுக்கும், பாடப்பட்ட கடவுள்களுக்கும் மாத்திரம் அதிக மதிப்பு ஏன்?
23) சைவ சமயாச்சாரியார்களும், சைவ சமய பக்தர்களும், பவுத்தர்களையும், சமணர் களையும் துன்புறுத்தியதேன்?
24) துன்புறுத்தவில்லையானால் தேவாரம் முதலியவைகளில் அவர்களை கண்டபடி இழித்துக் கூறி வைத்திருப்பதேன்?
25) வடமொழிக் கதைகளையும் வடமொழி புராணங்களையும் தள்ளி விட்டால் சைவர் களுக்கு ஏதாவது கடவுள் உண்டா?
26) சைவத்திற்கு ஏகக் கடவுள் வணக்கமா? பல கடவுள் வணக்கமா?
27) எத்தனைக் கடவுள்கள் இது வரை கண்டு பிடிக்கப்பட்டிருக்கின்றன?
28) இதோடு தீர்ந்ததா? இனியும் உண்டாகுமா?
29) சைவ சமயத்திற்கு கோயில் கொள்கை உண்டா?
30) விக்ரக ஆராதனை உண்டா?
31) வேறு ஒருவன் அர்ச்சகனாக இருந்துதான் கடவுளை வணங்க வேண்டுமா?
32) ஆகிய இவைகளுக்கு ஆதாரம் ஏது?
33) சைவர்களில் ஒவ்வொருவரும் அவரவர் வணங்க வேண்டிய கடவுளை நேரில் பூசனை புரிய அவரவருக்கு உரிமையுண்டா?
34) சைவத்தில் ஜாதி வித்தியாசம் உண்டா?
35) சைவக் கோயில்களில் இப்போது ஜாதி வித்தியாசம் பாராட்டப்படுகின்றதா?
36) அது சைவத்திற்கு முரணானது அல்லவா?
37) முரணானால் அம்முரணுக்கு இதுவரை சைவர்கள் ஏதாவது பரிகாரம் செய்தார்களா?
38) கடவுளை வணங்க கற்பூரம் கொளுத்தி வைத்து வணங்க வேண்டும் என்பதற்கு ஏதாவது ஆதாரம் உண்டா? எந்த ஆகமத்தில் சொல்லுகிறது?
39) ஏதாவது ஓர் ஆகமத்தில் சொல்லப்பட்டால் அது ஆரியர்களின் ஆகமமா? தமிழர்கள் ஆகமமா?
40) கற்பூரம் கொளுத்தும் வழக்கம் எது முதல் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது?
41) பிள்ளையார் என்ற ஒரு கடவுளுக்குச் சைவத்தில் இடம் இருக்கின்றதா?
42) கந்தபுராணத்தைச் சைவர்கள் ஒப்புக் கொள் ளுகின்றனரா?
43) ஒப்புக் கொள்ளுவதானால் அது சைவத்தில் பொருந்தியதுதானா?
44) சைவர்கள் சிவரகசியத்தையும் சிவ மகா புராணத்தையும், சிவபராக்கிர மத்தையும் ஒப்புக் கொள்ளுகின்றார் களா?
45) நால்வர்கள் பிரம்மாவையும், விஷ்ணுவையும் ஒப்புக் கொள்ளுகின் றார்களா?
46) அவை தனித்தனி கடவுள்களா?
47) நால்வர்கள் விஷ்ணுவைத் தாழ்த்திப் பாடி இருந்தால் அது மதத் துவேஷம், அல்லவா?
48) மனு ஸ்மிருதியையும், பராசர ஸ்மிருதியையும் சைவர்கள் ஒப்புக் கொள்ளுகின்றார்களா?
49) சமணர்கள் கழுவேற்றப்பட்டதைச் சைவர்கள் ஒப்புக் கொள்ளுகின்றார்களா? கோயில்களில் இன்னமும் திருவிளையாடல் புராண கதை உற்சவங்கள் நடக்கின்றதை மறுக்கின்றார்களா?
50) திருநீறு எதற்காகப் பூசுவது?
51) இலிங்கத்திற்கும், ஆவுடையாருக்கும் சொல் லும் கதையை ஒப்புக் கொள்ளுகின்றார்களா, இல்லையா?
52) ஒப்புக் கொள்ளாவிட்டால் அந்தப் பழக்கம் உள்ள வடமொழி ஆதா ரத்திற்கு என்ன பதில் சொல்லக் கூடும்?
53) இலிங்கம் எனும் வார்த்தை என்ன பாஷை? அதற்கு என்ன அர்த்தம்? எந்த ஆதாரப்படி?
54) கைலயங்கிரி எது? சுப்பிரமணியன் எது? கந்தன் எது? குமரன் எது?
55) மலையரசன் மகனென்றால் என்ன?
56) இப்பொழுது இதுவரை நடந்து வந்த கோயில் முறை, பூசை முறை, உற்சவ முறை முதலியவை களால் ஏற்பட்ட நன்மைகள் என்ன?
57) இவை இப்படியே நடக்க வேண்டியது தானா?
58) இவைகளின் பேரால் பல லட்சம் ரூபாய்கள் செலவாகின்றதே நியாயம் தானா?
59) அதை நிறுத்தி அச்செலவையும், காலத்தையும் வேறு வழியில் திருப்பலாமா? அல்லது இப் படியே இருக்க வேண்டுமா?
60) சைவர்கள் மேல்லோகத்தை ஒப்புக் கொண் டார்களா?
61) மறுபிறப்பை ஒப்புக் கொள்ளுகின்றார்களா?
62) திதிகளை ஒப்புக் கொள்ளுகின்றார்களா?
63) பிராமணர்களை ஒப்புக்கொள்ளுகின்றார்களா?
64) சமயாச்சாரிகளின் அற்புதங்களை எல்லாம் அப்படியே நடந்ததாகவே ஒப்புக் கொள்ளு கின்றார்களா?
65) மற்றும் சைவப் புராணங்களில் உள்ள எல்லா அற்புதங்களையும் நடந்ததாகவே ஒப்புக் கொள்ளுகின்றார்களா?
66) ஒவ்வொரு கோயிலுக்கும், ஒவ்வொரு சாமிக்கும் ஏற்பட்ட ஸ்தல மூர்த்தி, தீர்த்த புராணங்களை உண்மை என்பதற்காக ஒப்புக் கொள்ளுகின்றார்களா?
67) சைவர்களுக்குச் சரியான முறை எது?
68) சைவர்களுக்கு அல்லது சைவ சாமிகளுக்குத் தேவதாசி முறைகள் உண்டா?
69) வருணாசிரமம் உண்டா?
70) உண்டென்றால் ஆதாரம் எது?
71) இல்லை என்றால் ஆதாரம் எது?
72) இப்பொழுது அமலில் இருப்பதற்குக் காரணம் என்ன?
73) சைவ மடங்கள் எதற்கு?
74) அவை இதுவரைச் சாதித்த தென்ன?
75) அம்மடங்கள் இனியும் அப்படியே இருக்க வேண்டியதுதானா?
76) இம்மடங்களைத் திருத்த இதுவரை எந்த சைவராவது முயற்சி செய்தது உண்டா?
77) இப்பொழுதுள்ள சைவர்களில் சைவ சம யத்தைப் பற்றி அபிப்ராயம் சொல்ல நிபுணர் யார்?
78) அருகதை உடையவர் யார்?
79) பாரதம், இராமாயணம், பாகவதம் முதலிய வைணவப் புராணங்களில் வரும் சிவனைச் சைவர்கள் ஒப்புக் கொள்ளுகின்றார்களா?
80) வடமொழியும், அம்மொழியில் உள்ள நூல் களும் இன்றி சைவத்தை விளக்க முடியுமா?
—————–நன்றி: திராவிட நாடு இதழ் 16.1.1944
ஆரியர் செய்த அக்கிரமம் – அறிஞர் அண்ணா

டாக்டர் அத்பேத்காரும் மற்றும் இன்று தீண்டப்படாதவர்கள் என்று அழைக்கப்படும் ஏனையோரும் இந்தியப் பூர்வ குடிகளின் சந்ததிகளே. ஆதிகாலத்தில், அந்தப் பூர்வ குடி மக்களே நாட்டுக்கு, அதிபதிகளாக சுதந்திர வாழ்வு நடத்தி வந்தார்கள். அவ்வாறு வாழ்ந்து வந்த இந்தியப் பூர்வகுடி மக்கள் பிற்காலத்து வெளிநாட்டிலிருந்து வந்த ஒரு கூட்டத்தாருக்கு அடிமைப்பட்டு சுதந்திரத்தையும், மானத்தையும் இழந்து மிருகங்கள் அனுபவிக்கும் சாமானிய சுதந்திரங்களுமில்லாமல் உயிர்ப் பாரம் தாங்கும் படி நேர்ந்திருக்கிறது. இது போன்ற சம்பவத்தை உலக சரித்திரத்திலேயே காண முடியாது.
குடி புகுந்த ஆரியர்கள் பூர்வ குடிகளை விட பளபளப்பான வர்ண முடையவர்களாயிருந்தனர். எனவே, வெள்ளையர்களான ஆரியர்கள் கறுப்பர்களான அதி இந்தியர்களை விட உயர்ந்தவர்கள் என ஒரு ஐதீகம் ஏற்பட்டது. அன்று முதற் கொண்டே வர்ண பேதக் கொடுமை ஆரம்பமாயிற்று. வர்ண பேதக் கொடுமையினால் இந்தியாவைப் போல் கஷ்டப்படும் நாடு உலகத்திலேயே வேறு இல்லை என்று சொல்லலாம். ஆரியர்கள் ஆதி இந்தியர்களைச் சந்தித்த போதே அவர்களுக்கு `கறுப்பர்கள்’ என்ற இழிபெயரைச் சூட்டினார். போர்க் கடவுளான இந்திரனை ஒரு ஆரிய வீரன் பாராட்டிப் புகழ்வதைக் காண்க.
ஆரியர் சட்டத்துக்குக் கீழ்ப்படியாதவர் களைத் தண்டித்து கறுப்பர்களை மனுவுக்கு அடிமைப்படுத்தி மற்றும் நூற்றுக்கணக்கான உதவிகள் புரிந்து இந்திரன் ஆரியர்களைக் காப்பாற்றினான். (ரிக் வேதம் முதல் மண்டலம் 30-வது மந்திரம் 8-வது ஸ்லோகம்.)
ஆரியர்கொடுமை
ஆரியர்களுக்கும் ஆதி இந்தியர்களுக் கும் நடைபெற்ற போரைப் பற்றியும் ஆரியர் செய்த பற்பல கொடுமைகளைப் பற்றியும் வேதங்களில் பல குறிப்புகள் காணப்படுகின்றன. வெள்ளை ஆரியர்கள் கறுப்புப் பூர்வ குடிகளை எவ்வளவு குரூரமாக இம்சித்தார்கள் என்பதைக் கீழ்வரும் உதாரணங்களால் ஒருவாறு யூகித்துக் கொள்ளலாம்.
1 ஓ! உலகம் போற்றும் இந்திரனே! ஸுஷ்ரூ வனை எதிர்த்த இருபது கறுப்பு அரசர்களையும் அவர்களது அறுபதினாயிரத்துத் தொண்ணூற்றி யொன்பது படைகளையும் நீ உன் தேர் சக்கரத்துக்கு இரையாக்கி நசுக்கிக் கொன்று ஆரியர்களுக்கு உதவி புரிந்தாய்.
(ரிக் வேதம் மண்டலம் 1, மந்திரம் 53. ஸ்லோகம் 9)
2 ஓ! இந்திரனே! பிப்ரு மிருகய அசுர அரசர்களை ஆரிரிய மன்னனான விதாதின் பத்திரன் ரிஜீஷ்வனுக்கு அடிமைப் படுத்தினாய்! ஐம்பதினாயிரம் கறுப்புப் படைகளை செயித்தாய். முதுமை உயிரை மாய்ப்பது போல் அனேக கோட்டைகளையும் பாழாக்கினாய்.
(ரிக் வேதம் மண்டலம் 4 மந்திரம் 16 ஸ்லோகம் 18)
3 ஆரிய அரசன் தாபிதியின் தன்மைக்காக முப்பதாயிரம் தாசர்களை உன் மந்திரச் சக்தியி னால், ஓ! இந்திரனே! யமனுலகுக்கு அனுப்பினாய்!
(ரிக் வேதம் மண்டலம் 4 மந்திரம் 30 சுலோகம் 21)
4
“ஓ தீரனான இந்திரனே! உன் வலை பிரம்மாண்டமானது, மஹா பலாட்டியமானது, ஆயிரக்கணக்கானவர்களைச் சிக்க வைக்கும் ஆற்றலுடையது, ஒன்று, பத்து, நூறு, ஆயிரமாகப் பெருகும் சக்தியுடையது. அத்தகைய வலையில் தாசப் படையைச் சிக்க வைத்து நூற்றுக்கணக் கான ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கானவர் களைக் கொன்றாயே!
(அதர்வண வேதம் தாண்டம் 8 மந்திரம் 8 ஸ்லோகம் 7)
மேலே கூறிய உதாரணங்களால் ஆதி இந்தியர்கள் லட்சக்கணக்காகக் கொல்லப் பட்டதையும் சித்திரவதை செய்யப்பட்டதையும் ஊகித்து அறிந்து கொள்ளலாமல்லவா? எஞ்சிய ஆதி இந்தியர்கள், மீது ஆரியர்கள் கொண்டி ருந்த வெறுப்பும், வஞ்சகமும் அம்மா பெரிது! பெரிது!!
கீழ் வருவன ரிக் வேதம் 7-வது படலம் 104-வது மந்திரத்திலும் அதற்கான வேதம் கண்டம் 8, 4வது ஸ்லோகத்திலும் காணப்படுகின்றன.
ஸ்லோகம் 1
இந்திரனே ஸோமனே ராட்சகர்களை எரி, எரி! நசுக்கு, நசுக்கு! இடவனாந்திரங்களில் ஒன்று நூறாய் பெருகிவரும் அந்தக் கூட்டங்களை அடக்கு, அடக்கு! பின்னப்படுத்து, மடையர்களை அக்னி சுவாலையால் சுட்டுப் பொசுக்கு, வதை செய்! துண்டு துண்டாக வெட்டு!
ஸ்லோகம் 2
இந்திரனே, ஸோமனே, அரக்கக் கூட்டத்தை, துரோகிகளை, தீமையில் உருவான வர்களை, அக்னி குண்டத்தில் வைத்து, நீர் பானையில் வேகவைப்பது போல் அவித்துக் கொல்! துரோகிகளான அந்த பச்சை மண்ணைத் தின்னும் அரக்கர்களை மீளா நரகத்தில் தள்ளி இம்சிப்பாயாக!
ஸ்லோகம் 3
குகைகளிலும் வனாந்திரங்களிலும் அந்த சண்டிகளை கீறி, பிளந்து அரித்து சித்திரவதைச் செய்! இருண்ட காடுகளில் மறைந்து கிடக்கும் அவர்களுக்கு ஒரு உதவியும் செய்யாதே! அந்த வனாந்திரங்களில் அவர்கள் மீளாமல் போவார்களாக. பயங்கர பலத்தால் அவர்களை அடக்கி ஒடுக்குவீர்களாக!
ஸ்லோகம் 4
ஓ இந்திரனே, ஓ ஸோமனே. மேல் மண்டலத்திலிருந்து கொடியவர்களை கீழே சொரிவீர்களாக! அதிலிருந்து ஆயிரக்கணக்கான ஆரியர் கிளம்புமாறு கருணை புரிவீர்களாக! தினமும் பெருகிவரும் இந்தக் கூட்டங்களை எதிர்ப்பதற்காகவே வானிலிருந்து லட்சக்கணக் கான அஸ்திரங்கள் தோன்றும்படியாக செய்வீர்களாக!
ஸ்லோகம் 11
அசூரர்கள் ஒழிக! பிள்ளை குட்டிகள் நசிக்க! பிற்கால சந்ததிகள் அசூரக் கூட்டங்களை விழுங்கி விடட்டும்.
————————– அறிஞர் அண்ணா – ”திராவிட நாடு”, 29-11-1942
ஆரியரின் அந்தரங்க அகராதி!

(தமிழர்கள் நம்பும் பல கருத்துகளுக்கு ஆரியர் கொண்டுள்ள உண்மையான கருத்து)
கோயில்
கோவென மக்களை வெளியே அழ வைத்து வாழ்வதற்காக ஆரியர் தமிழரைக் கொண்டே கட்டிவைத்துக் கொண்ட இல்லங்கள்.
கும்பாபிஷேகம்
கும்பம்= வயது, அபிஷேகம்= … செய்வது, ஆரியர் வயறு குளிர… வாழ்,ஓர் வழி.
அர்ச்சனை…
ஹர்- சேனை என்பதன் மருஉ. ஹர் என்ற கொள்ளைக் கூட்டத்தாரின் சேனை போல், தமிழரைக் கொள்ளையடிக்க உபயோகமாகும் தந்திரம். திராவிட மக்களின் செல்வத்தை வாழ்வையும் இந்த நாட்டிலே கரைக்க உபயோகித்த ஆயுதம். இன்று கொஞ்சம் கூர் மழுங்கிக் கிடக்கிறது.
அரன்.
அரம் என்பதன் திரிபு. தமிழர் வாழ்வைத் துண்டு துண்டாக்க உபயோகிக்கப்பட்ட அரம்= ஒரு ஆயுதம்.
கௌபீனம்.
தமிழருக்கு, அவர்கள் பட்டு பீதாம்பரம். பவுன்புட்டா சேலை முதலிய ஆடைவகைகள் செய்யும் திறமை உள்ளவர்களாக இருந்தாலும், யார் என்ன அணிய வேண்டும் என்பதைக் குறிக்கும் பதம். லகரம், னகரமாகி விட்டது. தமிழர்களுக்கு விஷயம் தெரியாமலிருக்க.
வினாயகன்
வினா- அகன், என்பதன் கூட்டுச் சொல். ஏன் இப்படி எங்களைத் துரத்தினீர் என்ற வினா தமிழர்களுக்கு தோன்றினாலும், அதை மனத்திற்குள்ளேயே முடங்கும்படி செய்வதற்காக ஏற்பட்ட கற்பனைத் தேவன், வினா அகன், என்பதை வினாயகன் என்று தொகுத்துத் தமிழருக்குத்தந்தோம்.
ராவணன்
ரா+வண்ணன், ராவணன் என்றாயிற்று, ரா= இரவு, வண்ணன்= நிறமுடையவன், அதாவது கரிய மேனியன்,தமிழன்.
இதிகாசம்
இது, காசம், என்பது தமிழருக்குத் தெரியாதிருக்கும் பொருட்டு, இதிகாசம் என்று கூறப்பட்டது. இது= இந்தக் கதை, காசம்= கேட்டு நம்பினவருக்குக் கருத்து, காசநோய்க்காரரின் உடல் கெடுவது போல் கெட்டு விடும் என்பது புதைந்துள்ள பொருள்.
வேதம்
பேதம், என்பதையே, வேதம் என்று விளம்பினோம். நாட்டிலே பேதம் இருக்கவே, இந்த வேதம் பயன்படுவிதிலிருந்து, இந்த இரகசியம் விளங்கும்.
வைகுண்டம்
வை! முண்டம்! என்பதைத் திரித்து எழுதினோம். எம்மிடம், ஏமாறும் முண்டமே! வை, காசு பணம் என்று நம்மவர், திதி முதலிய காரியங்களின் போது தமிழரைக் கேட்க, வை குண்டம் என்ற இரகசிய கோட் (ஊடினந) உபயோகிக்கிறோம்.
கைலாயம்
தானை முன், என்பது முந்தானை என்று ஆயிற்று, தானை சேலை, முன்= முன்னால் இருக்கும் பாகம். அதுபோலவே லாயம் கை, என்பது கைலாயம் என்றாயிற்று. லாயம்= ஆரியருக்குச் செக்குமாடுகளாக உள்ள ஏமாளி களை அடைத்து வைத்திருக்கும் பட்டி, கை= நம்முடைய கையில் இருக்கிறது என்று, நம்மவர், தமிழரின் சடங்குகளிலே சொல்லுகிறோம். இதுவும் இரகசிய கோட் (ஊடினந) தேசிய சர்க்கார் எங்ஙனம் அமைப்பது, இங்கு மூன்று தேசங்கள் உள்ளனவே என்றுரைத்தாலோ, முப்புரிகள் முணு முணுக்கின்றன. பின்னர் எப்படித் தேசீய சர்க்கார் அமைப்பது! இதுசமயம் தேவை, தேசீய சர்க்காரால்ல, இன்று தேசீயம் என்பது, ஓர் கதம்பக் குழம்பாக இருக்கிறது. நாட்டுப் பிரிவினைக்குப் பிறகே, தெளிவான தேசீயம் தோன்ற முடியும்! இன்று அவசியமானது, போரைத் திறம்பட, வெற்றிகரமகா நடத்தித் தரக்கூடிய, பலமான சர்க்கார்- அதைப் பரிபூரண மாக ஆதரிக்கும் மக்கள்- அம்மக்களைக் சரியான வழியிலே நடத்திச் செல்லும் தலைவர்கள்- இவையே! இவைகட்குக் குறுக்கே நிற்பது, ஆச்சாரியார்ர் போன்றோர், அடிக்கடி விடும் அறிக்கைகள், சில சீமை மகாத்மாக்கள் விடும் யோசனைகள், பேட்டிகள் ஆகிய நிகழ்ச்கிகளே என்போம்.
தேசீய சர்க்கார் தேவை, தேவை என்று இன்று கூறும், ஆச்சாரியார், அதை அமைக்க, அவருக்கு இருந்த அருமையான சந்தர்ப்பங்களைத் தவற விட்டுவிட்டார் என்பதை, தர்க்கத் துக்காக அவர் மறுக்கலாமே தவிர, மனதார மறுக்க முடியாது!! போர் துவங்கிய உடனே, பிரிட்டனுடன் பேரம் பேசும் காரியத்திலே இறங்காது, பிணக்கு தீர, இங்குள்ள கட்சிகளைக் கலந்து சமரசம் உண்டாக்கியிருந்திருப்பின், இன்று ஆச்சாரியார் கோரும் சர்க்கார் இருந்திருக்கும்! அன்று அவரது ஆசை, வாலியை வீழ்த்த வேண்டும் என்பதன்றி வேறில்லை, இன்று விம்மிடுவது வீண் என்போம். இப்போதும், மூன்றாண்டுகட்கு முன்பு பேசியிருக்க வேண்டியதைப் பேசிக் கொண்டிருந்து பயன் இல்லை.
இன்று, ஆச்சாரியார் ஆங்கிலேயருக்கு, வேண்டுகோளோ, எச்சரிக்கையோ விடுவதை விட உண்மையிலேயே நாடு, ஜப்பானியரிடம் சிக்காமலிருக்க வேண்டுமென்ற எண்ணமிருப் பின், போர்க்காலத்திலே பேரம் பேசக்கூடாது என்று கூறிவிட்டு, களத்தை வேவல்கள் கவனிக்கட்டும், மக்களை நாங்கள் கவனித்துக் கொள்கிறோம் என்று கூறிவிட்டு, மற்றத் தலைவர்களுடன் கலந்து பேசி, மக்களிடையே, போரில் வெற்றிபெறுவதற்கான ஆர்வம் பிறக்கும் வேலையைச் செய்தலே, முறை என்போம்.
கல்கத்தாவிலே ஆச்சாரியார் பேசிய போது, தமது காங்கிரஸ் சகாக்களுக்குச் சொன் னார், “பிரிட்டிஷ் ஆட்சியை இத்தனை வருஷ காலம் பொறுத்துக் கொண்டோம், இனி இரண்டாண்டு பொறுத்துக்கொள்வோம்’’ என்ற அருமையான போதனை! அத்துடன் ஒன்று சேர்த்து ஆச்சாரியாருக்கு நாம் அர்ப்பணம் செய்கிறோம், இந்த மூன்றாண்டுகளாக உமது சகாக்கள் ஒதுங்கி இருந்தது போல், இன்னும் இரண்டாண்டு, வெற்றி கிடைக்கும்வரை, ஒதுங்கி இருக்கட்டும், இந்தச் சமயத்திலே, அவர்களை உள்ளே புகுத்தும் முயற்சி வேண்ண்டாம்.’’
இதனை நாம், எட்டு கோடி முஸ்லீம், நாலு கோடி திராவிடர், ஆறு கோடிக்கு அதிகமான ஆதிதிராவிடர் சார்பாகக் கூறுகிறோம். “பவதி பிஷாந்தேஹி’ என்று, சியாங்கே ஷெக்கிடமோ, ரூஸ்வெல்ட்டிடமோ சென்று பயனில்லை என்று சீரிய புத்திமதி கூறிய டாக்டர் அம்பேத்காரின் அறிக்கையையும், கண்டவர். காற்றாடியைப் பறக்க விடும் கபடம் வேண்டாம் என்று ஜனாப்ஜின்னா விடுத்த எச்சரிக்கையையும், கவனப்படுத்துகிறோம்.
————————————–அறிஞர் அண்ணா- “திராவிட நாடு”, 8-11-1942
பறைச்சி எல்லாம் ரவிக்கைப் போட்டுக் கொண்டார்கள் என்று பெரியார் பேசியதின் நோக்கம் என்ன?
இன்றைய தினம் பெருமைமிக்க மேயர் அவர்களைப் பாராட்டுவதற்காக கூட்டப்பட்ட கூட்டமாகும். இதிலே எனக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது குறித்து மிக்க மகிழ்ச்சியடைகின்றேன். இன்று காலை இருமலுக்காக டாக்டரைப் போய்ப் பார்த்தேன். அவர் மருந்து கொடுத்தார். அதை சாப்பிட்டேன் சாயந்திரம் திடீரென்று கைகால் எல்லாம் நடுக்கமேற்பட்டது. மார்பு துடிப்பு 150 க்கு வந்துவிட்டது. சாதாரணமாக 72 – 75 தான் இருக்க வேண்டும். கைகால் விரல்கள் மடக்கினால் வலிக்க ஆரம்பித்தது. உடனே டாக்டரிடம் சென்று காண்பித்தேன். அவர் காலையில் கொடுத்த மருந்தின் ரீ- ஆக்ஷன் தான் அது வேறொன்னுமில்லை. உங்களுக்கு வயது அதிகமானதால் கொஞ்சம் அதிகமாக இருந்திருக்கும் வேறொன்றுமில்லை என்று சொல்லி ஒரு ஊசியைப்போட்டு என்னை இரண்டு நாள்களுக்கு ஓய்வு எடுத்துக் கொள்ளும்படி சொன்னார். சாயந்திரம் பேச வேண்டுமே என்று சொன்னேன். நல்லா பேசுங்க என்று சொன்னார். அதன் பின் தான் கூட்டத்திற்கு வரமுடிந்தது.
நான் கூட்டத்திற்குக் கிளம்பிக் கொண்டிருக்கும் போது எனக்கு போன் வந்தது. போனில் பேசியவர்கள் நம்முடைய மாண்புமிகு அமைச்சர் அம்மையாரவர்களை மேயரவர்கள் சாதியைக் குறித்து கேவலமாகப் பேசியதாக குறிப்பிட்டார்கள். அதற்கு நான் அவர் அப்படிச் சொல்லி இருக்க மாட்டார் என்று நினைக்கின்றேன். அவர் படித்தவர் பெரிய பதவி வகிப்பவர் சுயமரியாதை இயக்கத்தைச் சார்ந்தவர். அவர் அப்படிப்பட்ட வார்த்தையை உபயோகித்திருக்க மாட்டார். அப்படி அவர் சொல்லி இருந்தால் நானே கண்டிக்கின்றேன். மன்னிப்பு கேட்கச் செய்கின்றேன் என்று சொன்னேன். மேயரவர்களைக் கேட்டதற்கு நான் சொல்லவில்லை என்று சொன்னார்.
சாதி சம்பந்தமான காரியங்களில் நான் ரொம்ப முயற்சி எடுப்பவன். அதற்காகவே வாழ்வதாகக் கருதுபவன். பறையன் – சக்கிலி – வண்ணான் – பரியாரி என்பது அவமானமல்ல. தொழிலின் காரணமாக வந்தது. பார்ப்பான் தன்னை மேன்மைப்படுத்தி கொள்ளவும் நம்மை இழிசொல்லாக்கி விட்டான். ஆனால் நம் எல்லோரையும் சேர்த்து பார்ப்பான் தேவடியாள் மகன் என்று சொல்கின்றான். சொல்வது மட்டுமல்ல சாஸ்திரத்திலும் அப்படியே எழுதி இருக்கின்றான். சட்டத்திலே (இந்தியாவிலே) தாசிபுத்திரன் என்றே இருக்கிறது. அனுபவத்திலுமிருக்கிறது என்று சொன்னால் கோயிலுக்குப் போகிறவன் அத்தனை பேரும் தேவடியாள் மகன் தானே! இது அண்ணாதுரைக்கும் தான் ராஜா சர்ருக்கும் தான். வேறு பார்ப்பானல்லாத எல்லோருக்கும்தான்.
பறையன் என்று சொல்லக்கூடாது என்று தான் சொன்னார்களே தவிர தண்ணீருக்கு எப்படி ஜலம் என்று சொல்கின்றானோ அதுபோல பார்ப்பான் காந்தியாரைப் பிடித்து பறையன் என்கிறதை நிலை நிறுத்துவதற்காக அரிஜன் என்று சொல்லி இன்னும் அதையே சொல்லிக் கொண்டிருக்கின்றான்.
பறையன் என்று சொல்லக்கூடாது என்று ஆரம்பித்தவன் நான். காந்தியார் தீண்டாதவர்களுக்குத் கிணறு வெட்டுவதற்காகக் காந்தி திலக் நிதியிலிருந்து ரு. 55.000 அனுப்பினார். அப்போது நான் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித்தலைவன். நான் அதை இதற்காக செலவிடாமல் அப்படியே வைத்துவிட்டேன். மற்ற மாகாணக்காரர்கள் எல்லாhம் செலவழித்து தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தனியாகக கேணி கோயில் பள்ளிக்கூடம் கட்டினார்கள். நான் காந்தியாருக்கு எழுதினேன் நாம் அவர்களுக்கு இவை எல்லாம் தனியாகச் செய்து கொடுப்பதால் ஒருக்காலும் தீண்டாமை ஒழியாது. அதற்குப் பதில் பறையன் கோயில் பறையன் பள்ளிக்கூடம் என்று சொல்லி மக்கள் அதையும் ஒதுக்கிவைத்து விடுவார்கள். இதை நான் விரும்பவில்லை. நம் மக்கள் தண்ணீர் எடுக்க வேண்டும். நம் மக்கள் படிக்கிற பள்ளிகளில் அவர்களையும் படிக்க அனுமதிக்க வேண்டும். நம் மக்கள் போகிற கோயில்களுக்கு அவர்களும் போக உரிமை வழங்க வேண்டும் என்று எழுதினேன். அதற்கு அவர் அதுபோல செய்ய முடியாது என்று சொல்லி விட்டார்.
நான் பறையன் என்று கேவலமாகச் சொன்னதாகத் தாழ்த்தப்பட்ட மக்களிடம் சொல்லியிருக்கின்றார்கள். நான் பல தடவை இந்தச் சொல்லைச் சொன்னாலும் அதை ஒழிப்பதற்காக சொன்னதுதான். எலக்சன் போது ராமசாமி நாயக்கர் பறைச்சி எல்லாம் ரவிக்கைப் போட்டுக் கொண்டார்கள் என்று தாழ்த்தப்பட்ட பெண்களைக் கேவலமாக சொன்னார் என்று விளம்பர நோட்டீஸ்களெல்லாம் போட்டு தாழ்த்தப்பட்ட மக்களே அவர் ஆதரிக்கிற கட்சிக்கு ஓட்டுப் போடாதீர் என்று வால் போஸ்டர்கள் ஒட்டி இருக்கின்றார்கள். அதைக் கண்டு சிலர் என்னிடம் வந்து நீ எப்படிச் சொல்லலாம் எனறு கேட்டார்கள். நான் சொன்னது உண்மைத்தான். நான் தாழ்த்தப்பட்ட பெண்கள் இதற்குமுன் ரவிக்கைப் போடக்கூடாது போட்டால் துணியே போடக்கூடாது அப்படி இருந்த சமுதாயம் கால மாறுபாட்டால் எப்படி ஆகி இருக்கின்றது. இன்றைக்கு ரவிக்கையில்லாமல் பார்க்க முடியவில்லை என்று சொன்னேன். இதைக் கொண்டு அந்த இனமக்களை எனக்கு ஓட்டுப் போடாமல் செய்வதற்காகக் கிளப்பி விடப்பட்டதே ஆகும் என்பதை விளக்கியதும் அவர்கள் புரிந்து கொண்டனர்.
இன்று காலை ஒரு திருமணத்திற்குச் சென்றிருந்தேன். அய்க்கோர்ட் ஜட்ஜ் கைலாசக் கவுண்டரின் மகளுக்கும் ராஜா சர்முத்தய்யா செட்டியாரின் தங்கை மகனுக்கும் (ப.சிதம்பரம்) நடைப்பெற்ற திருமணம் இதைக் கலப்புத் திருமணம் என்று சொன்னார்கள். என்னைப் பொறுத்தவரை எது கலப்புத் திருமணம் என்றால் மனித ஜாதிக்கும் மிருகத்திற்கும் நடப்பதே கலப்புத் திருமணமாகும்.
ஓரே ஜாதி மனித ஜாதி என்பது மாத்திரமல்லாமல் மணமக்கள் இருவருமே சூத்திர ஜாதி நாலாஞ்சாதியைச் சார்ந்தவர்கள் என்பதோடு நாலாம் சாதி நடுத்தர சாதியாக இருப்பதைப் பற்றிச் சிறிதும் வெட்கப்படாத சாதியைச் சார்ந்தவர்களாவார்கள். நான் தாழ்த்தப்பட்ட பெண்ணிற்கும் பார்ப்பானுக்கும் பார்ப்பனத்திற்கும் தாழ்த்தப்பட்ட ஆணுக்கும் இன்னும் இது போன்று பல சாதி கலப்புள்ள நூற்றுக்கணக்கான திருமணங்களைச் செய்து வைத்திருக்கின்றேன்.
ஜாதி என்பது ஒன்றுதான். இரண்டு பேர்களும் பார்ப்பானுக்கு வைப்பாட்டி பிள்ளைகள் தான். ஜாதியைக் காப்பாற்றத்தான் இருக்கிறேன் என்று சொல்லிக் கொள்ளும் இராஜாஜி கூட தன் மகளைச் சூத்திரரான காந்தியின் மகனுக்குத் தான் திருமணம் செய்து கொடுத்திருக்கின்றார். காங்கிரசினல் காமராஜரும் அவருடைய கம்பெனியும் தவிர மற்றவர்கள் அத்தனை பேரும் இராஜாஜியின் சீடர்கள்தான். இராஜாஜி அவர்கள் நம்மோடு தாழ்த்தப்பட்ட மக்கள் வீட்டில் சாப்பிடுவார் தன்னுடைய மகளைச் சூத்திரனான காந்தியின் மகனுக்குக் கொடுத்திருக்கிறார் என்றாலும் பிள்ளைகளை (பேரன்களை) யெல்லாம் பூணூல் மாட்டிப் பார்ப்பானாக்கி விட்டார்.
தேவதாசி வகுப்பைச் சேர்ந்த எம்.எஸ்.சுப்புலஷ்மியை ஜாதியைக் காப்பதற்கென்றே பத்திரிக்கை நடத்துகின்ற கல்கி பத்திரிகையின் அதிபர் சதாசிவம் என்ற பார்ப்பனர் திருமணம் செய்து கொண்டார். அவருக்குத்தான் இராஜாஜி முன்னோடும் பிள்ளையாக இருக்கிறார்.
இப்படி ஏராளமன பெரிய இடம் என்று சொல்லும்படியான இடங்களிலெல்லாம் நடைபெற்று இருக்கிறது. நாட்டுக்கோட்டை செட்டியார் வகுப்பிலேயே மாறுபட்ட ஜாதியைச் சார்ந்த பலரைத் திருமணம் செய்து வைத்திருக்கின்றேன். அதற்கெல்லாம் இராஜா சர் வந்து பாராட்டி இருக்கின்றார். இராஜா சர் எனக்கு ரொம்பவும் வேண்டியவர். நான் செய்கின்ற காரியங்களை எல்லாம் பாராட்டுபவர். எனது மதிப்பிற்குரியவர். பணத்தில் மட்டுமல்ல உண்மையிலேயே பெரும்தன்மை வாய்ந்த பெரியவர். அவர் அந்த சமுதாயத்தையே திருத்த வேண்டியவராவார். அவர் இத்திருமணத்திற்கு வராததன் மூலம் தனக்கக் கிடைத்தத் நல்ல வாய்ப்பையே இழந்து விட்டார் என்று தான் சொல்லுவேன்.
பார்ப்பானைத் தவிர ஜாதியைப்பற்றி பேசுகின்றவன் அத்தனை பேரும் பார்ப்பானுக்கு வைப்பாட்டி மகனேயாவான். என்னைப் பொறுதத்வரை நான் பறையனாக இருப்பதை கேவலமாகக் கருதவில்லை. சூத்திரனாக இருப்பதைவிட பறையனாக இருப்பதை பெருமையாகக் கருதுகின்றேன். எனக்கு பிள்ளை இல்லை – என்பது பற்றி ரொம்ப சந்தோசப்படுகின்றேன். ஒரு சமயம் பிள்ளையிருந்தால் அதுவும் பெண்ணாக இருந்தால் மாண்புமிகு சத்தியவாணிமுத்து அம்மையார் மகனுக்குக் கொடுத்திருப்பேன் அல்லது சிவராஜ் மகனுக்குக் கொடுத்திருப்பேன். காதல் மணம் வேண்டுமென்கிற நீ இப்படிச் சொல்லலாமா என்று கேட்பீர்கள். காதல் ஏற்பாடு முன்பே சொல்லிவிடுவேன். இதுபோல தாழ்ந்த சாதி பையன்களைப் பார்த்து காதல் செய் என்று சொல்லி விடுவேன். தாழ்த்தப்பட்ட மக்களைப் பற்றி அய்யா அவர்கள் அப்படி கருதி இருப்பாரானால் அவர் முன்னேற்றக் கழகத்திலிருப்பதற்கே லாயக்கற்றவர்தான். அவர்களை பார்த்து பறையர் என்று சொல்லிவிட்டோம். அவர்களிலே வைப்பாட்டி மகன் இல்லை. நம்மில் தான் வைப்பாட்டி மகன் என்பது. தாழ்த்தப்பட்ட பெண் தானாகப் போனால் கூட பார்ப்பான் ஏற்றுக் கொள்ளமாட்டான்.
நாம் ஜாதியை ஒழிக்க வேண்டும். நம் நாட்டில் இரண்டே ஜாதி தான் இருக்கிறது. ஒன்று பார்ப்பான் மற்றொன்று சூத்திரன் இதைத் தான் ஒழிக்க வேண்டும். ஒழியாமல் பாதுகாப்பதற்காகத் தான் பார்ப்பான் செட்டி முதலி நாயக்கர் கவுண்டன் படையாச்சி என்று நமக்குள் பல சாதிகளைப் பிரித்து அதில் ஒன்றுக்கொன்று நம்மை ஒன்று சேரவிடாமல் பிரித்து வைத்திருக்கின்றான்.
நாங்கள் தமிழர்கள். சூத்திரர்கள் அல்லர். இந்துக்கள் அல்ல என்கிற உணர்ச்சி நம் மக்களுக்கு வர வேண்டும். இன்றையதினம் இந்த பேச்சு பேசியதற்கு அம்மையாரிடம் அய்யா மேயர் அவர்களிடமிருக்கிற அன்பைவிட அதிகமான அன்பு கொண்டிருக்கின்றேன். . அம்மையாரும் பெருமைமிகு மேயரும் ஓரே கட்சியைச் சேர்ந்தவர்கள். நமக்குள் இதெல்லாம் இருக்கக்கூடாது.
இந்த தி.மு.க ஆட்சியே உலகமுள்ள வரைக்கும் இருக்க வேண்டுமென்று கருதுகின்றேன். இதைவிட உயர்ந்த எதுவுமே கிடையாது. இந்தியாவில் உள்ள
கம்யூனிஸ்ட் முதல் வேறு எந்த வெங்காயக் கட்சியும் ஜாதி ஒழிய வேண்டுமென்று வாயால் கூட சொல்வது கிடையாடு. தி.மு.க. ஒன்று தான் ஜாதி ஒழிய வேண்டுமென்று சொல்வதோடு ஒழிய பாடுபடுகிறது.
காங்கிரஸ் கட்சியில் காமராசர் ஒருவர் தான் ஜாதி ஒழிய வேண்டுமென்று சொல்பவர். அவர் தாழ்ந்த சாதியைச் சார்ந்தவர் தீண்டப்படாதவராக இருந்த வகுப்பைச் சார்ந்தவர். அதனால் தான் அவர் ஜாதி ஒழிய வேண்டும்மென்கின்றார். மற்ற காங்கிரஸ்காரர்கள் அத்தனை பேரும் ஜாதியைக் காப்பாற்ற வேண்மென்று கருதுபவர்களேயாவார்கள்.
தி.மு.க.ழகத்தினர் ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள் என்றால் வகுப்புவாரியாக அப்படி நடந்து கொள்ளவில்லை என்றாலும் 100 – க்கு 97 – தமிழர்களுக்குத்தான் கொடுக்கிறன்றார்கள்.100 -க்கு மூன்று தானே பார்ப்பானுக்குக் கொடுக்கிறார்கள். தமிழனாகப் பிறந்தவன் தமிழன் இரத்தம் ஒடுபவனாகப் பிறந்தவன் இரத்தம் இருந்தால் அண்ணாவைத்தான் ஆதரிக்க வேண்டும். அப்படி ஆதரிக்கவில்லை என்றால் அவன் இரத்தத்தில் கோளாறு இருக்கிறது என்றுதான் அர்த்தம்.
இன்றைய தினம் இருக்கிற முன்னேற்றக்கழகம் தமிழர்களுக்குக் கிடைத்த நல்வாய்ப்பு ஆகும்.
இவர்கள் தி.மு.க ஜெயிக்கிறவரை இவர்கள் ஒழிய வேண்டுமென்றுதான் பாடுபட்டு வந்தேன். ஏனென்றால் அவர்கள் வெற்றி பெறுகிறவரை இராஜாஜி தான் எங்கள் தலைவர் அவர் சொல்கிறபடிதான் நடப்போம் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். அதனால் இவர்கள் வந்தால் பார்ப்பான் சொல்படி தான் ஆட்சி செய்வார்கள். அதைவிட காங்கிரஸ்காரனனே மேல் என்று கருதினேன். ஆனால் இவர்கள வெற்றி பெற்றதும் தாங்கள் பார்ப்பானின் ஆள் அல்ல தமிழர்கள் என்பதைக் காட்டிக் கொண்டார்கள். அதனால் ஆதரிக்க ஆரம்பித்தேன். அதனால் ஒன்றும் நமக்கக் கேடுவரவில்லை நன்மைதான் கிடைக்கின்றது.
இந்த முன்னேற்றக்கழக ஆட்சி இருந்தால் தான் தமிழர் சமுதாயம் முன்னேறமுடியும். காங்கிரஸ் வந்தால் பார்ப்பான் ஆட்சிதான் நடைபெறும். இங்கு ஆட்சிக்கு தமிழன் வந்தாலும் அவன் டில்லியிலிருக்கிற – பார்ப்பான் பார்ப்பனத்தி சொல்கின்றபடிதான் நடக்க வேண்டும். சட்டத்திற்குக் கட்டுப்பட்டு அதிலுள்ளபடி மனுதரும ஆட்சிதான் சொல்வார்கள். இதை நம் மக்கள் உணர்ந்து தி.மு.க. விற்கு ஆதரவு தர வேண்டும்.
மேயருடைய பாராட்டுக் கூட்டத்தில் உண்மையாக நான் மேயரைப் பாராட்ட வரவில்லை. நீங்கள் தேர்ந்தெடுக்காதிருந்தால் அவர் எப்படி கவுன்சிலராக முடியும்? வெறும் ஆளாகத்தானே இருப்பார். உங்களுக்குத் தொண்டாற்றக்கூடிய உண்மையாக உழைக்கக்கூடிய சிறந்த ஒருவரைத் தேர்ந்தெடுத்திருக்கின்றீர்கள். அதற்காக ஓட்டளித்த உங்களைப் பாராட்டுகின்றேன். அதோடு அவரை மேயராகத் தேர்ந்தெடுத்த கவுன்சிலர்களைப் பாராட்டுகின்றேன். பாராட்டுக் கூட்டம் என்பது அவரது கொள்கைகள் பணிகளைப் பாராட்டுவதற்காகத் தான். மற்றும் அவர் பணிகள் இதுவரை தமிழகத்திலோ சென்னையிலோ சேர்மேன்கள் – மேயர்கள் செய்யாத பணியாகும். அப்பணிக்கு நாம் ஆதரவு தர வேண்டும். அவருக்கு உற்சாகமளிக்க வேண்டும்.
இதனால் அவர் கொல்லப்ட்டாலும் அவர் வேலையைவிட்டுப் போனாலும் வெறும் நாராயணனாலும் மக்கள் உள்ளவரை அவர்கள் மனத்திலிருந்ருக்கும்படியான காரியத்தினைச் செய்ய ஆரம்பித்து விட்டார். நடைப்பாதைளில் இருக்கிற கோயில்கள் குடிசைகள் கடைகளை எல்லாம் அகற்ற வேண்டுமென்று உத்தரவுப் போட்டு காரியம் செய்கின்றார். இதனால் சென்னை நகரின் அழகு அதிகமாகும்.
இந்தப் பார்ப்பனர் மட்டுமல்ல.30 வருடங்களுக்கு முன் சத்தியமூர்த்தி என்ற கொலைகார பார்ப்பான் இருந்தார். ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால் அப்போது ஜஸ்டிஸ் கட்சி அதாவது இன்றைய தி.மு.கழகம் போல் ஆட்சியிலிருந்தது. அப்போது தேவதாசித் தொழிலை நிறுத்த வேண்டுமென்று பொட்டுக் கட்டுவதைத் தடுக்க வேண்டுமென்று சட்டசபையில் சட்டம் கொண்டுவந்த போது சத்தியமூர்த்தி அய்யர் தேவதாசி என்பது கடவுளுக்குத் தொண்டு செய்யும் புனிதமான பணி அதை நிறுத்தக் கூடாது என்றார். அப்போது முத்துலட்சுமி அம்மையார் அவர்கள் எழுந்து இதுவரை
எங்கள் சகோதரிகள் கடவுளுக்குப் புனிதமான பணியினைச் செய்து வந்தது போதம். இனி உங்கள் சகோதரிகளை வேண்டுமானால் அப்பணிக்கு அனுப்புங்கள் என்று சொன்னார். அதன் பின் சட்டமாக்க்பட்டது.
அவ்வளவோடு மட்டுமல்ல. அப்போது பெண்களுக்கு 14 வயதுக்கு மேல் தான் திருமணம் செய்ய வேண்டும் என்று சாரதா சட்டம் என்கின்ற சட்டத்தைக் கொண்டு வந்தார்கள். அதுவரை சின்னப் பிள்ளைகளுக்கு 7 8 10 வயது பெண்களைத் திருமணம் செய்து கொள்ளும் வழக்கமாக இருந்தது. சிறு பெண்களைத் திருமணம் செய்து கொள்ளும் ஆண்கள் திருமணம் செய்து கொண்ட அன்றே அப்பெண்ணின் பெண்குறியை பேனாக் கத்தியால் அறுத்துவிட்டு புணர்வார்கள்.
சில குழந்தைகள் செத்துப் போயிருக்கின்றன. சில பெண்கள் அந்த புண்ணோடேயே புணர்ச்சியில் ஈடுபடுத்திக் கொண்டு வந்திருக்கின்றனர். இதைக்கண்டு வடநாட்ட்டிலிருந்து சாரதா என்பவர் இந்த (சாரதா) சட்டத்தைக் கொண்டு வந்தார். இது மத்திய சட்டசபைக்கு வந்தபோது இதை சட்டம் செய்வதை நான் அனுமதிக்கமாட்டேன். சட்டத்தை எதிர்த்து ஜெயிலுக்குப் போனாலும போவேனே ஒழிய இச் சட்டத்திற்கு நான் கட்டுப்படமாட்டேன் என்று சொன்னவர். வெகு நாள் வரை தன் மகளுக்கு கல்யாணமே செய்யவில்லை.
பார்ப்பான் வெள்ளைக்காரனை வேண்டாமென்று சொன்னது அவனோடு ரகளை செய்தது அவன் செய்த சீர்திருத்தத்தால் தான். பார்ப்பான் சிப்பாய்களைத் தூண்டி 1857 இல் நடைப்பெற்ற சிப்பாய்க் கலகத்திற்குக் காரணமும் இதுதான் இப்படி எந்தச் சீர்திருத்தம் ஆரம்பித்தாலும் பார்ப்பான் குறுக்கே படுத்துக் கொள்வான்.
இப்போது ஒரு சட்டம் பெண்களுக்கு 21 வயதுக்கு மேல் திருமணம் செய்ய வேண்டும் அதற்குள் செய்யக்கூடாது என்று வருகிறது. சுதேசமித்ததிரன் பார்ப்பான் இப்போது என்ன இதற்கு அவசரம் என்று எழுதுகின்றான்.
எந்தக் காரியம் செய்தாலம் தமிழர்களின் வளர்ச்சிக்கு நலனுக்கு முன்னேற்றத்திற்கானது என்றால் அதனைப் பார்ப்பான் எதிர்த்தே தீருவான். மேயர் அவர்கள் நடைபாதையிலிருக்கிற கோயில் குடிசைகளை அகற்றுவதற்கு எல்லோரும் உதவி செய்து ஊக்கமும் உற்சாகமும் அளிக்க வேண்டுமா? அதைவிட்டு அகற்றாதே என்று சிபார்சுக்கு வர வேண்டுமா? இப்படிக் குறுக்கிட்டால் காரியம் எப்படி நட்கும்? ஜனங்களுக்கு நல்ல காரியங்கள் நன்மைகள் செய்ய வேண்டுமானால் நல்ல பெயர் எடுக்க முடியாது துணிந்து செய்ய வேண்டியது தான்.
——–11-12-1968 அன்று சென்னை – அயன்புரத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு. “விடுதலை” 15-12-1968 -“பெரியார் களஞ்சியம்” தொகுதி 18- “ஜாதி-தீண்டாமை” பாகம்- 12 பக்கம் 73-81
தாழ்த்தப்பட்ட மக்களின் உண்மையான எதிரி யார்?
அம்பேத்கர் (ஏப்ரல்-14) பிறந்த நாளை முன்னிட்டு பெரியாரின் இந்தச் சொற்பொழிவை பதிப்பிக்கிறோம்.ஊன்றிப் படித்து உண்மையை உணர வேண்டுகிறோம்.
மறைந்த பாபாசாகிப் டாக்டர் அம்பேத்கர் அவர்களும், நானும் நெடுநாட்களாக நண்பர்கள் என்பது மாத்திரமல்ல; பல விஷயங்களில் எனது கருத்தும் அவரது கருத்தும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். சாதி ஒழிப்புஎன்ற விஷயத்தில் மாத்திரமே நாங்கள்ஒத்தக் கருத்துடையவர்கள் என்பது அல்ல. இந்து மதம், இந்து சாஸ்திரங்கள், இந்துக் கடவுள்கள், தேவர்கள் என்பவர்கள் பற்றிஇந்து மதப்புராணங்கள் இவைகளைக் குறித்தும்கூட, எங்கள் இரண்டு பேர் கருத்தும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்.அது மட்டுமல்ல, அவற்றைப் பற்றி நான் எவ்வளவு உறுதியாகவும், பலமாகவும்என் அபிப்பிராயங்களைக் கொண்டிருக்கின்றேனோ, அவ்வாறு தான் அவரும் மிகவும் உறுதியாகவும், பலமாகவும், லட்சியங்களைக் கடைப்பிடித்தார். என் பிரச்சாரத்தில் சாதி ஒழிய வேண்டுமென்று மாத்திரம் நான் சொல்லவில்லை. அதற்கு முக்கிய அடிப்படையான மதம், ஆதாரம் ஒழிய வேண்டும் என்று தான் நானும் சொல்லி வருகிறேன். அவரும் அப்படித்தான் சொன்னார்…
நம்மிடையே பல சாதிகள் இருப்பதாகச் சொல்லப்பட்டாலும், உண்மையில் பல சாதிகள் கிடையாது. நாம் இரண்டே சாதிகள். ஒன்று பார்ப்பனர்கள்; இன்னொன்று சூத்திரர்கள். அவ்வளவுதான். மதப்படியும், சாஸ்திரங்கள்படியும், நாம் இரண்டே பிரிவுகள்தான். அவைகளில் பிற்படுத்தப்பட்ட மக்கள், பஞ்சமர்கள், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் என்ற பிரிவெல்லாம் இல்லை. இவை பார்ப்பனர் நலனுக்காக, தொழில் காரணமாக என்று பிரித்த பிரிவுகளேயாகும். இவை பிறவி சாதிகள் அல்ல. இதை நீங்கள் நன்றாக உணர வேண்டும்.நீங்களும் நாங்களும் சூத்திரர் என்ற ஒரே சாதிதான். இப்படிப்பட்ட நாம்,இப்படி நமது இழிவைப் பற்றிக் கவலைப்படாமல் இருப்பதற்கு இன்னொரு காரணம், நம்மில் அநேகர் அதிகாரத்திற்கு ஆசைப்பட்டு, அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற ஆசையினால் துணிவுடன் இதை எடுத்துச் சொல்லாமல் பயந்து, தங்கள் சுயநலத்திற்கு எதையும் விட்டுக் கொடுத்து விடுகிறார்கள். ஆகையால் பார்ப்பனர்களின் பதவி, அதிகாரத்திற்கு அடிமையாகி விடுகிறார்கள். அப்படிப் போகிறவர்களைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. ஆனால், அதன் மூலம் நமது கொள்கைகளை விட்டுக் கொடுத்துவிட்டு வருகிறார்களே என்பது குறித்துதான் எனது கவலை எல்லாம்.உங்களுக்குச் சொல்ல வேண்டியது இன்னொன்றும் உண்டு.
அநேக மக்கள் தாழ்த்தப்பட்ட மக்களில் தவறாக நினைக்கிறார்கள்: ‘பார்ப்பனரல்லாத மக்கள்தான் தங்கள் எதிரிகள் என்றும் பார்ப்பனர்கள்கூட அல்ல’ என்றும்!இது, மிகவும் தவறான எண்ணமாகும். இதற்குக் காரணம், பார்ப்பன ஆட்சியில் பல அதிகாரங்களும், பண விநியோகமும் இருப்பதால் பார்ப்பானுக்கு நல்ல பிள்ளையாகவும் அவனது விஷமப் பிரச்சாரத்தை நம்புவதும் ஆகும்.நாங்கள் வேறு என்றும், நீங்கள் வேறு என்றும் எண்ணக்கூடாது. சூத்திரர்கள் ஓர் இனமாக இருந்தால், தங்களுக்கு ஆபத்து என்று கருதி, பல இனமாக ஆக்கிவிட்டார்கள். ஆகவே, இப்படியெல்லாம் உங்களை எண்ணும்படி வைப்பது பார்ப்பனர்கள் சூழ்ச்சிதானே ஒழிய வேறில்லை. இப்படிப்பட்ட கருத்தைப் பார்ப்பனர்கள்தான் தூண்டி விடுகிறார்களே ஒழிய வேறில்லை. பார்ப்பான் எதை எதைச் செய்கிறானோ, அவற்றையெல்லாம் இவன் (பார்ப்பான் அல்லாதவன் சூத்திரன்) அவனைப் பார்த்து அதேபோல் செய்கிறானே தவிர வேறில்லை.ஆகவே, அவன் அதைச் செய்யவில்லை என்றால், மற்றவர்கள் அதைச் செய்யமாட்டார்கள். ஒரு உதாரணம் சொல்ல விரும்புகிறேன். ஈரோட்டில் எங்கள் தெருவில் தண்ணீர் குழாய் இருக்கிறது. அதில் எல்லோரும் தண்ணீர் எடுக்க வருவார்கள். ஒரு பார்ப்பாரப் பெண் வந்தால், அவள் கையில் ஒரு செம்பில் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வந்து அதை அந்தக் குழாய்க்கு மேல் ஊற்றிக் கழுவிவிட்டுப் பிறகுதான் குடத்தை வைத்துத் தண்ணீர் பிடிப்பாள். அதைப் பார்த்து நம்மவன் வீட்டுப் பெண் பிள்ளையும் அப்படியே செம்பில் தண்ணீர் கொண்டு வந்து ஊற்றி விட்டுப் பிறகுதான் குடத்தை வைத்துத் தண்ணீர் பிடித்துக் கொண்டு போவாள். அதைப் பார்த்து எங்கள் பக்கத்து வீட்டு சாய்பு (முஸ்லிம்) பொம்பளையும் செம்பில் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வந்து குழாய் மேல் ஊற்றிக் கழுவி விட்டுத்தான் குடத்தை வைத்து தண்ணீர் பிடிக்கிறாள்.முதலாவது பார்ப்பாரப் பொம்பளை தண்ணீர் ஊற்றுவது, மற்றச் சாதிக்காரர்கள் குழாயைத் தொட்டுவிட்டார்களே, தீட்டுப்பட்டு விட்டதே என்பதற்காக ஊற்றிக் கழுவுகிறாள். இதைப் பார்த்து அதை அப்படியே காப்பி அடித்துச் செய்கிற மற்ற பெண்களுக்கு நாம் எதற்காக இப்படிச் செய்கிறோம் என்று தெரியாமலேயே செய்து கொண்டு வருகிறார்கள். அதுபோலத்தான் பார்ப்பனரல்லாதாரில் சாதி வெறியும், பிற்போக்கு மனப்பான்மையும் கொண்டுள்ளவர் நிலைமை – அவர்களது இந்த மாதிரியான நடத்தைக்குக் காரணம். அறியாமையும், பார்ப்பானைப் பார்த்துக் காப்பி அடிப்பதுமே தவிர, அகம்பாவம் (பார்ப்பனர்களைப் போல்) கிடையாது. சொல்லிக் கொடுக்கும் வாத்தியாரைச் சரிப்படுத்தினால், மாணவன் தானே சப்பட்டு விடுவான்!பார்ப்பான்தான் நமக்கு முக்கிய எதிரி. பார்ப்பன மதம், பார்ப்பனப் புராணங்கள், பார்ப்பன சாஸ்திரங்கள், பார்ப்பனக் கடவுள்கள் இவைதான் நமக்கு எதிரிகளேயொழிய வேறில்லை. ‘பார்ப்பனரல்லாதார் அல்ல நமக்கு எதிரிகள்’ என்பதை ஆதிதிராவிடர் ஆகிய நீங்கள் தெளிவாக உணர வேண்டும்.
————– புதுடெல்லியில் 15.02.1959 அன்று அம்பேத்கர் பவனத்தில் தந்தைபெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு
விஞ்ஞானப் பெருக்கமுள்ள நாளில் நாம் இன்னமும் கடவுளைப் பற்றியும், பேசிக் கொண்டிருப்பது உண்மையிலேயே ஒரு காட்டுமிராண்டித்தனமேயாகும். என்றாலும், நமது எதிரிகள் நம்மீது வேறு எவ்விதக் குற்றமும் சுமத்த யோக்கியதையற்றுப் போனதால், நம்மை நாஸ்திகர்கள் என்று விஷமத்தனமாய் கெட்ட எண்ணத்துடன் பிரச்சாரம் செய்து வருவதால் அதைப் பற்றியும் பேசியாக வேண்டியிருக்கிறது.
கடவுள்களைப் பற்றிய அபிப்பிராயத்தில் பழைய கால அதாவது காட்டுமனிதன் காலத்தைவிட கிறிஸ்தவர்களில் ஒரு சாராரும், முகமதியர்களும் எவ்வளவோ சீர்திருத்தத்திற்கு வந்து விட்டார்கள். அவர்கள், ஒரே ஒரு கடவுள்தான் இருக்க முடியும் என்றும், அக்கடவுள் வாக்குக்கும், மனதுக்கும் எட்டாதது என்றும், அது, பெயரும் குணமும், உருவமும் இணையும் இல்லாதது என்றும், மனிதரில் நன்மையான காரியங்கள் செய்தவர்களுக்கு நன்மையும், தீமையான காரியம் செய்தவர்களுக்கு தீமையும் அளிக்கக் கூடியது என்றும், சொல்லி குணம் கற்பிக்கிறார்கள். அப்படிப்பட்ட கடவுளைப் பற்றி இப்பொழுது நாம் விவகாரம் பேச வேண்டிய அவசியம் இல்லை.
இக்கருத்துடன் உணர்ந்திருக்கும் கடவுளால் மனிதன் தீமை செய்யப் பயப்படுவான் என்றும், நன்மை செய்ய ஆசைப்படுவான் என்றும், பல அறிஞர்களும் அதை ஒப்புக் கொண்டு காரணம் சொல்லுகிறார்கள். ஆகையால், இன்றைய தினம் இந்துக்கள் என்பவர்களுடைய, சிறப்பாக பார்ப்பனர்களால் கற்பிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான கடவுள்களை எடுத்துக் கொள்ளுவோம். இந்துக்களுக்கு இத்தனை கடவுள்கள் ஏன்? அவை எப்படி வந்தன? பல்லாயிரக் கடவுள்கள் தவிர மற்றும் என்னவெல்லாம் கடவுள்களாகி இருக்கின்றன. பாருங்கள், மாட்டு மலம் முதல் மாடு, குதிரை, எருமை, குரங்கு, பெருச்சாளி, கழுகு, காக்காய், பாம்பு, மரம், செடி, கல், மண், உலோகம், காகிதம் முதலியவையும் மற்றும் பல ஆபாச உருவங்களும் கடவுளாக வணங்கப்படுகின்றன.
காசியில் ஒரு கோயிலில் இரண்டு உயிருள்ள நாய்கள் படுத்திருக்கின்றன. அவற்றுக்கும் பூஜை போட்டு வணங்குவதை நேரில் பார்த்தேன். இப்படிச் செய்வதற்கு பண்டிதர்களால் தத்துவார்த்தம் சொல்லப்படுகிறது. இவ்ளவோடு இல்லாமல், இக்கடவுள்களுக்கு பெண்டு, பிள்ளை, வைப்பாட்டி, தாசி விபசாரித்தனம், ஆகாரம், உறக்கம், புணர்ச்சி முதலியவையும் கற்பிக்கப்படுகின்றன. மற்றும், இக்கடவுளுக்கு கல்யாணம், சாவு முதலியனவும்கூட கற்பிக்கப்படுகின்றன. கற்பிக்கப்படுவதோடு தொலைந்து போனாலும் பரவாயில்லை; செய்கையில் செய்து காட்டி, அதாவது கடவுள் விபசாரித்தனம் செய்வதாகவும், தாசி வீட்டுக்குப் போவதாகவும், மற்றவர்கள் வீட்டுப் பெண்களை அடித்துக் கொண்டு போவதாகவும் உற்சவங்கள் செய்து காட்டி, அவற்றுக்காக பல கோடிக் கணக்கான ரூபாய்களும், மனிதனின் விலை உயர்ந்த நேரமும், ஊக்கமும் உணர்ச்சியும் பாழக்கப்படுகின்றன. இக்காரியங்கள் இந்த 20ஆம் நூற்றாண்டில் செய்யக் கூடியதா என்பதை யோசித்துப் பாருங்கள். இம்மாதிரி கடவுள்களை கற்பித்துக் கொண்டு அவை மேல்கண்ட மாதிரியான காரியங்கள் செய்தாக புராணங்களையும், இதிகாசங்களையும் கற்பித்துக் கொண்டு, அக்காரியங்களை நாமும் கடவுள்கள் பேரால் செய்து கொண்டு திரிவது பற்றி மனிதனுக்கு வெட்கம் வரவேண்டாமா என்று கேட்கின்றேன். இதைச் சொன்னால் எங்களை நாஸ்திகர்கள் என்று சொல்லுவது யோக்கியமும் நாணயமுமான பேச்சாகுமா என்று கேட்கின்றேன்.
கடவுள் இருந்தால் இப்படித்தான் இருக்க வேண்டுமா? இப்படி இருப்பதை கடவுள் என்று அறிவுடையவன் ஒப்புக் கொள்வானா? இன்று நாம் இம்மாதிரி கடவுள்களுக்காக செய்கிற பூஜையும், படையல்களும், கல்யாணம் முதலிய உற்சவங்களும் கடவுளுக்கு எதற்கு? எந்தக் கடவுளாவது ஏற்றுக் கொள்கிறதா? கடவுள்களை பொம்மைகள் மாதிரி வைத்து வருஷா வருஷமும், சில கடவுள்களுக்கு வருஷத்தில் இரண்டு தரம் மூன்று தரமும் கல்யாணங்கள் செய்கின்றோமே, அவை எதற்கு? சாமிக்கு உண்மையிலேயே பெண் ஜாதி வேண்டியிருந்தால், போன வருஷம் செய்த கல்யாணம் என்ன ஆயிற்று என்று கேட்க வேண்டாமா? விவாக விடுதலை ஆகிவிட்டதா, அல்லது தள்ளி வைக்கப்பட்டு விட்டதா, அல்லது ஓடிப்போய் விட்டதா, அல்லது முடிவெய்தி விட்டதா என்று நாமாவது யோசிக்க வேண்டாமா? எதற்காக வருஷா வருஷம் கல்யாணம்? அக்கல்யாணத்துக்கு கொட்டு முழக்கு ஆடம்பரம், பணச் செலவு ஏன்? சாமி கல்யாண சமாராத சாப்பாட்டை எந்த ஜாதியார் சாப்பிடுகிறார்கள் தெரியுமா? கண்டபடி பதார்த்தங்களை பாழாக்குவதேன்? இந்தப் படி வருஷம் எத்தனை உற்சவம்? எங்கெங்கு உற்சவம்? இவற்றால் இதுவரை அடைந்த பலன் என்ன?
நம் மக்கள் படிப்பு விஷயத்தில் 100-க்கு 95 பேர்கள் தற்குறி; நமது நாடும் உலகத்திலேயே மிக்க ஏழ்மை நாடு என்கின்றோம். ஒரு மனிதனுக்கு தினம் சராசரி இரண்டு அணா வரும்படி கூட இல்லை என்று சொல்லுகிறோம். இப்படிப்பட்ட நாம் கடவுள்களுக்கு என்று எவ்வளவு செல்வங்களை பாழாக்குகிறோம் என்று யோசிக்கின்றோமா? ஒரு கடவுளுக்கு தினம் எத்தனை தடவை பூஜை படையல்? ஒவ்வொரு பூஜை படையலுக்கு எத்தனை படி அரிசி பருப்பு சாமான்கள்? இவை எல்லாம் யார் வயிற்றில் அறுத்து வைக்கப்படுகின்றன? மக்களுக்கு கல்வி இல்லை, தொழில் இல்லை, சாப்பாடு இல்லை என்று ஒருபுறம் சொல்லிக் கொண்டு, மற்றொரு புறம் இம்மாதிரி செல்வம் பாழாக்கப்படுவதென்றால், யோக்கியன் எப்படி சகித்திருக்க முடியும்? தயவு செய்து நீங்களே யோசித்துப் பாருங்கள்.
வைகுண்ட ஏகாதசிக்கும், ஆருத்திரா தரிசனத்துக்கும், தைப் பூசத்துக்கும், கார்த்திகை தீபத்துக்கும், திருப்பதிக் குடைக்கும், திருச்செந்தூர், ராமேஸ்வர ஸ்நானத்துக்கும் என்று வருஷா வருஷம் எத்தனை கோடி ரூபாய் பாழாகிறது? மக்கள் போக்குவரத்துச் செலவு, மெனக்கேடு செலவு, உடல் கேடு, ஒழுக்கக் கேடு ஆகிய காரியம் எல்லாம் சேர்த்துப் பார்த்தால், இக்கடவுள்களால் மக்களுக்கு நன்மையா, தீமையா என்று கேட்கிறேன்.
இச்செலவுகளைத் தடுத்து அச்செல்வங்களை வேறு வழிக்குப் பயன்படுத்த முயற்சி செய்தால், வரியே இல்லாமல் அரசாங்கத்தை நடத்தக் கூடிய பணம் மீதியாகாதா? நம் நாட்டில் கடவுள்களுக்கு இருக்கும் செல்வங்களைக் கைப்பற்றி தொழிற்சாலைகள், பள்ளிக்கூடங்கள் ஏற்படுத்தினால், வேலையில்லாத் திண்டாட்டமும், தற்குறித் தன்மையும், அன்னிய நாட்டார் வியாபாரத்தின் பேரால் சுரண்டுதலும் இந்நாட்டில் அரை நிமிஷமாவது இருக்க முடியுமா என்று கேட்கிறேன். ஏதோ ஒரு கூட்டங்கள் சோம்பேறியாய் இருந்து வயிறு வளர்க்க வேண்டி மற்ற மக்கள் தாங்கள் பாடுபட்டுத் தேடிய செல்வத்தை பாழாக்கி இவ்வளவு முட்டாள்தனமாய் நடந்து கொள்வதா என்று கேட்கிறேன். மற்றும், கடவுள் பேரைச் சொல்லிக் கொண்டு, பக்தியை காரணம் காட்டிக் கொண்டு எவ்வளவு முட்டாள்தனமாய் நடந்துகொள்ளுகிறோம் என்பதைச் சற்று சிந்தித்துப் பாருங்கள்.
காவடி எடுத்துக்கொண்டு கூத்தாடுவதும், மக்கள் துணி கட்டிக் கொண்டு வீதியில் கிடந்து புரளுவதும், மொட்டை அடித்துக் கொள்ளுவதும், பட்டை பட்டையாய் மண்ணையும், சாம்பலையும் அடித்துக் கொள்ளுவதும், உடம்பில் கம்பிகளையும் கத்திகளையும் குத்திக் கொள்ளுவதும், அழுக்குத் தண்ணீரில் குளிப்பதும் ஆன காரியங்கள் எதற்கு என்று சிந்திக்கிறோமா? மற்றும் மக்கள் சாப்பிடக் கூடிய பால், நெய், தயிர், தேன், பழச்சத்து முதலியவற்றை கல்லின் தலையில் குடம் குடமாய்க் கொட்டி சாக்கடைக்குப் போகும்படி செய்து வேடிக்கை பார்ப்பது எதற்கு? இந்தச் சாமிகளுக்கு கோடிக்கணக்கான ரூபாய் பெறும்படியான நகைகள் எதற்கு? பட்டு பீதாம்பரத் துணிகள் எதற்கு? லட்சம், பத்து லட்சம், கோடி பெறும்படியான ஆறு மதில், ஏழு மதில்கள் உள்ள பெரும் மதில்கள், கட்டடங்கள், கோபுரங்கள் எதற்கு? தங்கம், வெள்ளி வாகனங்கள் எதற்கு? இவை எல்லாம் நாட்டு பொதுச் செல்வங்கள் அல்லவா? இவற்றை கல்லுகளுக்கு அழுதுவிட்டு, சோம்பேறி சூழ்ச்சிக்காரன் பார்ப்பான் வயிற்றை நிரப்பி, அவன் மக்களை அய்.சி.அய்., அய்கோர்ட் ஜட்ஜ், திவான்களாக ஆக்கிவிட்டு, இதுதான் கடவுள் தொண்டு என்றால், இந்தக் கடவுள்கள் இருக்க வேண்டுமா என்று நீங்களே யோசித்துப் பாருங்கள்.
இப்படிப்பட்ட கடவுள்களையும் கடவுள் தொண்டுகளையும் முஸ்லீம்கள் ஒப்புக் கொள்ளுகிறார்களா? கிறிஸ்தவர்கள் ஒப்புக்கொள்ளுகிறார்களா? அல்லது இந்து பகுத்தறிவுவாதிகளாவது ஒப்புக்கொள்ளுகிறார்களா? என்று கேட்கிறேன். இனி எப்பொழுதுதான் நமக்குப் புத்தி வருவது? இதைச் சொன்னால் பார்ப்பான் நம்மை நாஸ்திகன் என்கிறான். அவன் பேச்சையும், அவனது எரிச்சலைத் தின்று வயிறு வளர்க்கும் கூலிகள் பேச்சையும் கேட்டுக் கொண்டு முட்டாள் ஜனங்கள், மதம் போச்சு, கடவுள் போச்சு என்று கூப்பாடு போடுகிறார்கள். அப்படியானால், இந்தக் கடவுள்களை ஒப்புக்கொண்டு இம்மாதிரிக் காட்டுமிராண்டித்தனமாய்க் கூத்தாடுவதுதானா ஆஸ்திகம்? இல்லாவிட்டால் நாஸ்திகமா? அப்படியானால், அப்படிப்பட்ட நாஸ்திகத்தைப்பற்றி எங்களுக்குச் சிறிதும் கவலை இல்லை. இந்த பூச்சாண்டிக்கு நாங்கள் பயப்பட மாட்டோம். ஏதோ எங்களுக்குத் தோன்றியதை – நாங்கள் சரி என்று நம்புவதை, அதாவது, நம் நாட்டுக்கு மேற்கூறிய மதமும், கடவுள்களும் கொடிய வியாதியாய் இருக்கின்றன என்றும், இவை ஒழிந்தாலொழிய நாடும் மனித சமூகமும் அறிவும், ஆற்றலும் முற்போக்கடையாது என்றும் கருதுவதை உங்களிடம் விண்ணப்பித்துக் கொள்ளுகிறோம்.
பொறுமையாய்க் கேட்டு, பிறகு உங்கள் இஷ்டப்படி நடவுங்கள் என்றுதான் சொல்லுகிறோமே ஒழிய, பார்ப்பனர்கள்போல, நாங்கள் சொல்வதை எல்லாம் நம்புங்கள் என்றோ, நம்பினால் தான் மோட்சம், நம்பாவிட்டால் நரகம் என்றோ சொல்லுவதில்லை.
——————தந்தைபெரியார் – “குடிஅரசு”- 19-12-1937